தடை செய்த லாட்டரி விற்ற இருவர் கைதுதேனி: தேனி போலீஸ் எஸ்.ஐ., மாயன் தலைமையிலான போலீசார் பெரியகுளம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தை கேட் தனியார் பிரவுசிங் சென்டர் அருகே பி.டி.ஆர்., தெரு சந்திரசேகரன் 68, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முத்துப்பாண்டிபட்டி ஆனந்த் 30, நின்றிருந்தனர். அவர்களை விசாரித்ததில் ஆனந்த் கேரளாவில் லாட்டரி வாங்கி வந்து, சந்திரசேகரருக்கு சப்ளை செய்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான லாட்டரிகள், பணம் ரூ. 68,100ஐ பறிமுதல் செய்தனர்.பீரோ, கட்டில் திருடியவர் கைதுதேனி: அன்னஞ்சி காளியம்மன் கோயில் தெரு ராஜேந்திரன் 60. இவர் அல்லிநகரம் பகுதியில் பீரோ, கட்டில் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். கம்பெனியின் வெளியில் வைக்கப்பட்டிருந்த 5 கட்டில் செட், ஒரு பீரோ, 20 அடி நீளமுள்ள இரும்பு கம்பிகளை காணவில்லை. ராஜேந்திரன் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். கட்டில் உள்ளிட்ட பொருட்களை திருடிய சிவராம் நகர் ராஜீவை போலீசார் கைது செய்தனர்.டூவீலர் திருட்டுதேனி: சுக்குவாடன்பட்டி டெலிபோன் நகர் ராஜா 57. இவரது டூவீலரை தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரி விலக்கு அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நிறுத்திச் சென்றார். திரும்பி வருகையில் டூவீலரை காணவில்லை. பாதிக்கப்பட்ட ராஜா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.மனைவி மாயம்: கணவர் புகார்தேனி: கோடாங்கிபட்டி வினோத்குமார் 29. பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி சந்தியா 27. வினோத்குமார் ஜூன் 7ல் வேலைக்கு சென்று மதியம் சாப்பிட சென்றார். வீட்டில் சந்தியா இல்லை. வினோத்குமார் புகாரில் பழனிசெட்டி போலீசார் சந்தியாவை தேடி வருகின்றனர்.அலைபேசியில் விளையாட பணம் தராததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலைதேனி: பாலார்பட்டி டிரைவர் அறிவழகன் 52. இவரது மகன் ஈஸ்வரன் 19. பிளஸ் 2 மாணவர். இவர் மாடுகள் பராமரிப்பிலும், அலைபேசியிலும் அதிக நேரத்தை செலவழித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் அலைபேசியில் விளையாட தந்தையிடம் பணம் கேட்டார். தந்தை தர மறுத்தார். இதனால் வீட்டை விட்டுச் சென்ற ஈஸ்வரன் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். மயக்கம் வருவதாக தெரிவித்தார். அறிவழகன் விசாரித்த போது விஷம் சாப்பிட்டதாக ஈஸ்வரன் கூறினார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக டொம்புச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் பிளஸ் 2 மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலிகடமலைக்குண்டு: கண்டமனுார் தெற்குத் தெரு பழனிச்சாமி 38. நேற்று முன் தினம் கிராமத்தில் விடிய விடிய நடந்த திருவிழாவில் பங்கேற்றார். அதிகாலை வீட்டிற்கு திரும்பி வரும்போது வெள்ளப்பாறை ஓடை பாலத்தில் ஓய்வுக்காக அமர்ந்தார். எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார். இறந்தவரின் மனைவி மைதிலி புகாரில் கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர்கள் விபத்தில் பஸ் டிரைவர் பலி தேவதானப்பட்டி: செங்குளத்துபட்டி பிரிவில் டூவீலர் மீது டூவீலர் மோதிய விபத்தில் தனியார் பள்ளி பஸ் டிரைவர் மணிகண்டன் 49, பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா எழுவனம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 49. வத்தலக்குண்டு தனியார் பள்ளியில் டிரைவராக பணி புரிந்தார். சின்னாளபட்டியில் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு தேவதானப்பட்டி அருகே செங்குளத்துபட்டி பிரிவு அருகே செல்லும் போது, எதிரே வந்த டூவீலர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். விபத்து ஏற்படுத்திய ஆண்டிபட்டி அருகே ரோசனம்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஈஸ்வரன் 22, டூவீலரில் கொடைக்கானல் சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது விபத்து நிகழ்ந்துள்ளது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரனிடம் விசாரணை செய்து வருகிறார்.முன் விரோத தகராறு : 8 பேர் மீது வழக்குபோடி: மீனாட்சிபுரம் செல்லாயி அம்மன் கோயில் தெரு ராஜேந்திரன் 45. இவரது மனைவி முருகேஸ்வரியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசிக்கின்றனர். ராஜேந்திரன் தனது தாய் தொந்தியம்மாள் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் மனைவி முருகேஸ்வரி அவரது உறவினர்கள் ராஜ்மோகன், பொட்டல் களத்தை சேர்ந்த காயத்ரி, கோடங்கிபட்டியை சேர்ந்தசெல்லையா, செல்லமுத்து, கருவாயன், சுரேஷ், வீரபாண்டியை சேர்ந்த சித்தாதரி கண்ணன் ஆகியோர் ராஜேந்திரன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கி உள்ளனர். தகராறை விலக்கி விட வந்த தொந்தியம்மாளை, ராஜ்மோகன் கீழே தள்ளி, காயம் ஏற்படுத்தினார். கழுத்தில் இருந்த செயின், ராஜேந்திரனின் அலைபேசி காண வில்லை. போடி தாலுகா போலீசார் முருகேஸ்வரி, ராஜ்மோகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.