உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கத்தியை காட்டி மிரட்டியவர் கைதுபோடி: குலசேகர பாண்டியன் தெரு பாண்டியன் 45. இவர் இரட்டை வாய்க்கால் ரோட்டில் நின்று இருந்தார். அப்போது போடி கீழத் தெருவை சேர்ந்த மருதுபாண்டி 37, மது குடிக்க பணம் கேட்டார். பணம் இல்லை என பாண்டியன் கூறி உள்ளார். ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி இடுப்பில் வைத்து இருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போடி டவுன் போலீசார் மருது பாண்டியை கைது செய்தனர்.பிளஸ் 2 முடித்த மாணவர் தற்கொலைபோடி: கீழராஜ வீதியை சேர்ந்தவர் ஹரிஷ் 18. இவர் போடி தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ முடித்து விட்டு, அண்ணா பல்கலை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கலந்தாய்விற்கு சென்றார். மதிப்பெண் குறைவாக இருந்ததால் 'சீட்' கிடைக்க வில்லை. மனம் உடைந்த ஹரிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.இளம் பெண் மாயம்ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி மகள் சத்யபிரியா 21. நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். வெளியில் படுத்திருந்த தாய், நள்ளிரவில் தண்ணீர் குடிப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது சத்தியபிரியாவை காணவில்லை. சத்யபிரியாவின் தாய் சுமதி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.தனியார் நர்சிங் கல்லூரி மாணவி மாயம்ஆண்டிபட்டி: அனுப்பப்பட்டி பாண்டி மகள் சூர்யா 18. க.விலக்கில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்தார். இரு நாட்களுக்கு முன் கல்லூரி விடுதியில் இருக்கும் போது, தனது தாத்தா இறந்து விட்டதாக சொல்லி இறப்பிற்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளார். மாலை 4:00 மணிக்கு கல்லூரியில் இருந்து பாண்டி வீட்டிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களது மகள் தனது தாத்தா இறப்பிற்கு சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னவர், இன்னும் வரவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர். தங்களது உறவினர்கள் யாரும் இறக்கவில்லை என்று பாண்டி வீட்டில் தெரிவித்துள்ளார். வேலம்மாள் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ