உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கணவர் மாயம்: மனைவி புகார்தேனி: பாரஸ்ட் ரோடு 5வது தெரு குணசேகரன் 36. பால் வியாபாரி. தினமும் அதிகாலை 2:30 மணிக்கு பால் கறக்க கருவேல்நாயக்கன்பட்டி அண்ணாநகருக்கு டூவீலரில் சென்று, காலை 11:30 மணிக்கு வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வருவது வழக்கம். ஜூலை 4ல் பால்கறக்க டூவீலரில் சென்றவர், வீடு திரும்ப வில்லை.மனைவி அமுதவள்ளி புகாரில் தேனி போலீசார் பால் கறக்கும் நபரை தேடி வருகின்றனர்.தற்கொலைதேனி: டொம்புச்சேரி அருகே உப்புக்கோட்டை முருகாண்டி 55. திருமணம் ஆகவில்லை. கவரிங் நகை வியாபாரம் செய்து வந்த நிலையில் ஓராண்டாக டொம்புச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சர்க்கரை நோயினால் காலில் புண் ஏற்பட்டு, கவனிக்க உறவினர்கள் இன்றி விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் உயிரிழப்புதேனி: வீரபாண்டி முல்லைப் பெரியாறு மொட்டை எடுக்கும் இடத்தில் 67 வயது மதிக்கத்தக்க ஆண், வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து கிடந்தார். அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இறந்த நபர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் வீரபாண்டி வி.ஏ.ஓ., கீதா புகாரில் போலீசார், இறந்த முதியவர் விபரங்கள் குறித்து விசாரிக்கின்றனர்.பேரிகார்டில் டூவீலர் மோதி பட்டதாரி இளைஞர் பலிபெரியகுளம்: லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மோகன். இவரது மகன் ராஜேஸ்வரன் 22. பொறியியல் பட்டதாரி. வேலை தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் டூவீலரை வாங்கி கொண்டு தேனியில் இருந்து லட்சுமிபுரம் வரும் போது, இரவில் ஏ.மீனாட்சிபுரம் அருகே ரோட்டில் இருந்த 'பேரிகார்டில்' மோதினார். தேனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி