உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி மேற்கு சந்தையில் ரூ.8 கோடியில் புதிய கடைகள் அரசுக்கு திட்ட அறிக்கை தாக்கல்

தேனி மேற்கு சந்தையில் ரூ.8 கோடியில் புதிய கடைகள் அரசுக்கு திட்ட அறிக்கை தாக்கல்

தேனி : தேனி நகராட்சி பெரியகுளம் ரோட்டில் உள்ள மேற்கு சந்தையில் ரூ.8 கோடியில் புதிய கடைகள் கட்டுவதற்கான அறிக்கையை நகராட்சி சார்பில் அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு சந்தை சுமார் 5.75 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு பெரிய அளவிலான காய்கறி சந்தை இயங்கியது. கொரோனா காலத்தில் காய்கறி கடைகள் பல இடங்களில் பிரித்து சென்றன.தற்போது மேற்கு சந்தையில் 145 கடைகள் இயங்கி வருகின்றன.இந்த கடைகள் 1986ல் கட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கடைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் புதிய கடைகள் கட்ட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி ரூ.8 கோடி மதிப்பில் தரைத்தளத்தில் 174 கடைகள் மட்டும் கட்டுவதற்கு அறிக்கை தயார் செய்யப்பட்டது.அனுமதி பெற நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ