உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு எதிர்பார்ப்பு

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு எதிர்பார்ப்பு

கம்பம், : நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் எப்போது அனுமதிக்கப்படும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு அதிகரித்து மண்ணின் வளம் பாதித்துள்ளது. மண்ணில் என்ன சத்துக்கள் உள்ளது, எது தேவை என்பதை தெரிந்து அதற்கேற்ப உரம் பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். அதற்கு மண் பரிசோதனை செய்ய வேண்டும். எனவே, மண் பரிசோதனைக்கு மண் எடுக்க விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் ஒன்று தேனி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை சார்பில் கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை மண் சாம்பிள் எடுப்பதற்கு பயிற்சியும் தரவில்லை. நடமாடும் மண் ஆய்வக வாகனத்தை காணவில்லை. எனவே நடமாடும் வாகனத்தை உடனே பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை