| ADDED : ஜூலை 11, 2024 05:46 AM
தேனி: ஊராட்சிகளில் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்க வேண்டும்.துாய்மை பாரத திட்டத்தில் 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும். உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாவட்ட மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டம் மாலையில் நிறைவடைந்தது.