| ADDED : ஜூலை 12, 2024 04:58 AM
தேனி: மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் ஜூலை 13ல் ஐந்து இடங்களில் நடக்கிறது.ரேஷன்கடைகள் மூலம் பொது வினியோகத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் உள்ள குறைகள், ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கடை மாற்றம் தொடர்பாக மனுக்கள் வழங்கலாம். குறைதீர் கூட்டம் 5 தாலுகாக்களிலும் நடக்கிறது. பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் கிராமம் அழகர் நாயக்கன்பட்டி ரேஷன்கடையில் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் தலைமையில், தேனியில் வீரபாண்டி ரேஷன்கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம் தலைமையில், ஆண்டிப்பட்டியில் ராஜக்காள்பட்டி ரேஷன்கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா தலைமையில், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி தலைமையில் அனுமந்தம்பட்டி ரேஷன்கடையிலும், போடி நாகலாபுரத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமையிலும் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன. முகாமில் வழங்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நடவடிக்கை குழு பிரதிநிதிகள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.