உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பலாத்காரம்: இருவருக்கு சிறை

சிறுமி பலாத்காரம்: இருவருக்கு சிறை

மூணாறு: பதினேழு வயது சிறுமியை தாக்கி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே மூலத்தரா பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுயியை, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் 29, கடந்த 2020 அக்.6ல் பலமாக தாக்கி பூப்பாறையைச் சேர்ந்த முருகேஸ்வரன் ஓட்டிய ஜீப்பில் போடிமெட்டுக்கு கடத்திச் சென்றார். அங்கு தயாராக இருந்த போடிநாயக்கனூரைச் சேர்ந்த ரவீந்திரனிடம் 34, சிறுமியை ஒப்படைத்தனர். அவர் சிறுமியை சென்னை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ராஜாகாடு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அன்றைய இன்ஸ்பெக்டர் ஜெயன் தலைமையில் போலீசார் மூவரையும் கைது செய்து சிறுமியை மீட்டனர். ரவீந்திரன் கூறியபடி ராஜேஷ், முருகேஸ்வரன் ஆகியோர் சிறுமியை கடத்தியதாக தெரியவந்தது.இந்த வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான்சன், முதல் குற்றவாளி ரவீந்தரனுக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.1.4 லட்சம் அபராதம், இரண்டாம் குற்றவாளி ராஜேஷ்க்கு 10 ஆண்டுகள் மூன்று மாதம் சிறை, ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.முருகேஸ்வரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ஸ்மிசூ கே. தாஸ் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ