உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் வெப்பம் அதிகரிப்பு ரேஷன் கடை நேரம் மாற்றம்

கேரளாவில் வெப்பம் அதிகரிப்பு ரேஷன் கடை நேரம் மாற்றம்

மூணாறு : கேரளாவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் ரேஷன் கடை செயல்படும் நேரத்தை மாற்றி அரசு உத்தரவிட்டது.மாநிலத்தில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை மக்கள் தவிர்க்கும் வகையில் வேலை நேரத்தில் மாற்றம், அங்கன்வாடி உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. தற்போது ரேஷன் கடை செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. ரேஷன் கடைகள் காலை 8:00 முதல் பகல் 12:00 வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையிலும் செயல்பட்டன.அதனை காலை: 8:00 முதல் பகல் 11:00 வரை மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை என மாற்றம் செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை