உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு துறைகளில் தொழில் பழகுநர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு திடீர் நிறுத்தம் ஐ.டி.ஐ., படித்தவர்கள் அவதி

அரசு துறைகளில் தொழில் பழகுநர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு திடீர் நிறுத்தம் ஐ.டி.ஐ., படித்தவர்கள் அவதி

தேனி:அரசு போக்குவரத்து கழகம், மின் வாரியத்தில் இரண்டு ஆண்டுகளாக தொழில் பழகுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐ.டி.ஐ., படித்தவர்கள் தொழில் பயிற்சி பெறுவதில் பாதிப்புஏற்பட்டுள்ளது.அரசு, தனியார் ஐ.டி.ஐ.,க்களில் மெக்கானிக், எலக்டிரிக்கல், பிட்டர் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்களை (அப்பரண்டீஸ்) தொழில் பழகுனர்களாக தேர்வு செய்து உதவித் தொகையுடன் அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சின் போது அரசு பஸ்களில் பழுது நீக்குதல், சீரமைப்பு பணிகளை அவர்கள் கற்றுக்கொள்வர்.ஆனால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக தொழில் பழகுனர்கள் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவில்லை. இதனால் ஐ.டி.ஐ.,க்களில் படித்தவர்கள் தொழில் பழகும் வாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது:போக்குவரத்து கழக டிப்போக்களில் பஸ்களை பராமரிக்க போதியஅளவில் ஊழியர்கள் இல்லை. இதனால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணிச்சுமை உள்ளது. ஐ.டி.ஐ., படித்தவர்கள் தொழில் பழகுனர்களாக வரும் போது, அவர்கள் அரசு பஸ்களை எவ்வாறு பழுது நீக்குவது உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்வர். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு பணிச்சுமையும் குறையும்.பயிற்சி பெறுபவர்களை நிரந்தரப்படுத்தும் போதும் பராமரிப்பில் குழப்பம் இருக்காது. பயிற்சி இன்றி நேரடியாக பணிக்கு வரும் போது சிரமத்திற்கும் ஆளாவர். இதனால் ஐ.டி.ஐ., படித்தவர்களை தொழில் பழகுநர் பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்