உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த குடிநீர் மெயின் குழாய் சீரமைப்பு

சேதமடைந்த குடிநீர் மெயின் குழாய் சீரமைப்பு

கூடலுார்: கூடலுாரில் சேதமடைந்த குடிநீர் மெயின் குழாய் தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்து கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கூடலுார் எம்.ஜி.ஆர்., காலனி அருகே கோம்பை, பண்ணைப்புரம், தேவாரத்திற்கு செல்லும் குடிநீர் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வீணாக வெளியேறியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்து வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து சேதமடைந்த மெயின் குழாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அடிக்கடி இப்பகுதியில் சேதமடைவதை தவிர்க்க குழாயை சுற்றிலும் கான்கிரீட் அமைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை