உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையால் ரோடு சேதம் -தற்காலிக சீரமைப்பு தேவை

மழையால் ரோடு சேதம் -தற்காலிக சீரமைப்பு தேவை

கூடலுார்: மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ரோடுகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக கூடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதில் கூடலுாரில் இருந்து கருநாக்கமுத்தம்பட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், சுருளியாறு மின் நிலையம் செல்லும் பணியாளர்கள் என அதிகமானோர் வாகனங்களில் இவ்வழியாக சென்று திரும்புகின்றனர். மேலும் நெல் வயல்களுக்கு செல்லும் விவசாயிகள் அதிகம் இப்பாதையை பயன்படுத்துகின்றனர். குண்டும் குழியுமாக மாறிய இந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இது தவிர தம்மணம்பட்டியில் இருந்து கழுதைமேடு செல்லும் ரோடு முழுமையாக சேதமடைந்துள்ளது. விவசாயிகள் விளைநிலங்களுக்கு வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் மழைக்காலங்களில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை