உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆர்.டி.ஓ., ஆபீஸ் ஊழியர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்

ஆர்.டி.ஓ., ஆபீஸ் ஊழியர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்

மூணாறு : தேவிகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஊழியர்கள் கூண்டோடு பணிஇடமாற்றம் செய்யப்பட்டனர்.அந்த அலுவலகத்தில் நிலம் ஆக்கிரமிப்பு, போலி பட்டா, விதிமுறை மீறி கட்டுமானம்ஆகியவை தொடர்பான ஆவணங்களை கையாண்ட ஊழியர்கள் அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.மூணாறு, தேவிகுளம் ஆகிய பகுதிகளைமையமாகக் கொண்டு செயல்படும் நிலமாபியா, போலி பட்டா உரிமையாளர்கள், சில அரசியல் பிரமுகர்கள்ஆகியோரின் தலையீட்டால் ஊழியர்கள்பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக புகார்எழுந்தது. அதனை மறுத்த மாவட்ட நிர்வாகம் வழக்கமான நடைமுறையில் நிர்வாக வசதிக்காக ஊழியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.இதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை என இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ