உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீர்வரத்து இல்லாத ருத்ராயப்பெருமாள் கோயில் அருவி

நீர்வரத்து இல்லாத ருத்ராயப்பெருமாள் கோயில் அருவி

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் மறவபட்டி ருத்ராய பெருமாள் கோயில் அருவியில் நீர் வரத்து இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் கிடைக்கும் நீர் ருத்ராயப் பெருமாள் கோயில் மலையை ஒட்டி உள்ள பகுதியில் அருவியாக விழும். கடந்த சில வாரங்களில் ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் அருவியில் நீர் வரத்து இல்லை. அடுத்துவரும் புரட்டாசி சனி வாரங்களில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, அருவியில் குளித்து பெருமாள், கருப்பண சுவாமிகளை வணங்கிச் செல்வர். அருவியில் தண்ணீர் விழும் என்ற நம்பிக்கையில் வரும் பக்தர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை