உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள்

பெரியகுளம்: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிவதால் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் 115க்கும் அதிகமான துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு உபகரணங்கள், பணி செய்ய உதவி உபகரணங்களான மண்வெட்டி, தட்டு, மண்வாரி, கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த உபகரணங்கள் தேசமடைந்து விட்டன.கையுறை வழங்கப்படாததால் பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளில் குப்பை அள்ளும் அவல நிலை தொடர்கிறது.சில சமூக விரோதிகள் மது பாட்டில்களை உடைத்தும், கண்ணாடி பாட்டில்கள், வீட்டில் உடைந்த கண்ணாடி மின்விளக்குகளை உடைத்து குப்பையில் வீசுகின்றனர். இவற்றை வெறும் கைகளில் அகற்றும்போது பணியாளர்களுக்கு கைகளில் இரத்த காயங்கள் ஏற்படுகின்றன. காயத்திற்கு மருந்திட ஊராட்சிகளில் முதலுதவி பெட்டி இல்லை.சில இடங்களில் கழிவு நீர் வாய்க்கால் சாக்கடைகளில் பணி புரியும் போது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி புரிகின்றனர். இதனால் நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை