உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோட்டில் சிதறிய கற்கள்: போக்குவரத்து பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோட்டில் சிதறிய கற்கள்: போக்குவரத்து பாதிப்பு

மூணாறு, : கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் திடீரென கற்கள் சிதறியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே 42 கி.மீ. தூரம் ரோடு இரு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அந்த வழியில் மூணாறு அருகே கேப் ரோட்டில் மூன்று கி.மீ. தூரம் ரோடு மலையில் கடந்து செல்கிறது. அங்கு ஒரு புறம் செங்குத்தான பாறையும், மறுபுறம் ஆபத்தான பள்ளத்தாக்கும் என்பதால் பாறைகளை உடைத்து ரோடு அகலப்படுத்தப்பட்டது.அதன் பெயரில் விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு அதிகமாக பாறைகள் உடைக்கப்பட்டதால் அடிக்கடி மண், நிலச்சரிவு ஏற்பட்டன.இந்நிலையில் கேப் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு மலை மீது இருந்து திடீரென கற்கள் உடைந்து சிதறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். சம்பவத்தின்போது வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரோட்டில் கற்கள் சிதறி கிடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது. அந்த வழியில் சென்ற டிரைவர் உள்பட பொது மக்கள் கற்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ