| ADDED : ஆக 13, 2024 11:44 PM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் குறுவட்ட கேரம் போட்டி நடைபெற்றது. 19 பள்ளிகளை சேர்ந்த 100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.பள்ளிகளுக்கிடையேயான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நேற்று உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் முகமது சைபுல், முதல்வர் நூருல் ஷிபா துவக்கி வைத்தனர்.14,17 மற்றும் 19 வயதுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஏற்பாடுகளை செய்தனர். அல்ஹிக்மா மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழரசன் போட்டிகளை ஒருங்கினைத்தார். தொடர்ந்து வளைபந்து, கோகோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளியில் நடக்க உள்ளது.