30 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது
கம்பம்: உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டுவேல் தலைமையிலான போலீசார் நேற்று கம்பம் கோம்பை ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற 3 பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பையில் 30 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். இளையேந்திரன் 44, சுரேஷ் 43, வனராஜ் 59 ஆகிய மூவரையும் கம்பம் வடக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.