உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி தொகுதியில் கடைசி நாளில் ஏழு பேர் வேட்பு மனு தாக்கல்

இடுக்கி தொகுதியில் கடைசி நாளில் ஏழு பேர் வேட்பு மனு தாக்கல்

மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஏழு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.கேரளாவில் லோக்சபா தேர்தல் ஏப்.26 ல் நடக்கிறது. அதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.இடுக்கி லோக்சபா தொகுதியில் நேற்று ஏழு பேர் தேர்தல் அதிகாரியான இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.மா.கம்யூ., சார்பில் எம்.எம். மணி, பி.எஸ்.பி. சார்பில் ரசல்ஜாய் , பிரசாந்த், பி.டி.ஜே.எஸ். சார்பில் மனேஷ், விடுதலை சிறுத்தை சார்பில் சஜி ஷாஜி, 2 சுயேட்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஏற்கனவே ஐந்து பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் மொத்தம் 12 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசோதனை இன்று நடக்கிறது. ஏப்.8 வரை மனுக்கள் வாபஸ் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை