உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் காரில் சாகசம்; தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சி

தேசிய நெடுஞ்சாலையில் காரில் சாகசம்; தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சி

மூணாறு : கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் காரில் சாகசம் காட்டும் சம்பவம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட பிறகு வாகனங்கள் சீறி பாய்கின்றன. அதனால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் கார்களில் சாகச பயணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அது போன்ற சம்பவங்கள் கடந்த 15 நாட்களில் மூன்று முறை அரங்கேறியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு எஸ்டேட் பகுதியில் பைசன்வாலியைச் சேர்ந்த ரிதுகிருஷ்ணன் ஜூன் 2ல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தாக கார் ஓட்டிய நிலையில் காரில் இருந்த அவரது நண்பர்கள் உடலை வெளியில் காட்டி ஆட்டம் போட்டனர். அச்சம்பவத்தில் நிதுகிருஷ்ணனின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் ஓராண்டுக்கு ரத்து செய்தனர்.அதன்பிறகு அதே பகுதியில் ஜூன் 14 ல் கோழிக்கோடு பகுதி பதிவு எண் கொண்ட காரில் ஒருவர் ஆபத்தை உணராமல் கதவு வழியாக உடல் வெளியில் தெரியும்படி நின்றவாறு அலைபேசியில் போட்டோ எடுத்த வண்ணம் பயணித்தார். அது குறித்து மோட்டார் வாகனதுறையினர் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் அதே பகுதியில் தமிழக பதிவு எண் கொண்ட காரில் இளம் பெண், இளைஞர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் கதவு வழியாக உடலை வெளியில் தெரியும்படி நின்றவாறு ஆபத்தான முறையில் பல கி.மீ.தூரம் பயணித்தனர். பஸ் உள்பட ஏராளமான வாகனங்கள் எதிரில் வந்தபோதும் அவற்றை பொருட்படுத்தாமல் கார் வேகமாக சென்றது. அச்சம்பவம் குறித்து தேவிகுளம் போலீசார், மோட்டார் வாகனதுறை அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை