| ADDED : ஜூன் 13, 2024 06:43 AM
பெரியகுளம்: சோத்துப்பாறை அணையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிகப்படியான வெள்ள பெருக்கின் போது அணையின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவினர் ஆய்வில் தெரிவித்தனர்.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. 2001 ல் சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு பாசனம் மற்றும் பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்கு பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது அணை கட்டப்பட்டு 23 ஆண்டாகிறது. கொடைக்கானல் மலைப்பகுதி,சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வருகிறது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. 100 மில்லியன் கன அடி கொள்ளவாகும். நேற்று 125. 78 அடியாக இருந்தது.ஆய்வு: தேசிய அணைகள் பாதுகாப்பு தென்மண்டல தலைவர் அஜய்குமார் சின்ஹா தலைமையில், மண்டல இயக்குனர்கள் கிரிதர், வசந்தகுமார், துணை இயக்குனர் கார்த்திகேயன் உட்பட 9 பேர் கொண்ட குழுவினர் அணைப்பகுதியை ஆய்வு செய்தனர். அணையின் கட்டுமானம் உறுதித்தன்மை, அணையின் நீர்த்தேக்கம், 43 மீட்டர் அகலமுடைய சுரங்கப்பாதையில் நீர் கசிவு தன்மை மற்றும் அணைகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிகப்படியான வெள்ளம் வரும் போது அணையின் ஸ்தரத்தன்மையை உறுதி செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த மாதம் கோடைமழையால் மே 20 ல் அணை நீர்மட்டம் முழுவதுமாக உயர்ந்து ஜூன் 7 வரை மறுகால் பாய்ந்தது.