| ADDED : ஏப் 28, 2024 05:36 AM
தேனி, : தேனி நகர் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 15 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், ஊழியர்கள் அரண்மனைப்புதுார், அல்லிநகரம், சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, பழைய ஜி.எச்., ரோட்டில் உள்ள 16 மீன் விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 4 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதில் 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், ஒரு கடைக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அக்கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. உணவுப்பொருட்கள் தரமற்ற முறையில் தயார் செய்தால், விற்பனை செய்தால் பொது மக்கள் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.