உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் நடந்தமாநில பேச்சுப்போட்டி

கல்லுாரியில் நடந்தமாநில பேச்சுப்போட்டி

தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், கரூர், கோவை, ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, திருச்சி, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 130 கல்லுாரிகளைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்றனர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார். இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் பேசினர். மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவனிமாடசாமி போட்டிக்கு நடுவராக செயல்பட்டார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ