மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
5 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
5 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
5 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
5 hour(s) ago
மூணாறு, : 'மூணாறில் கோடை சுற்றுலா சீசன் துவங்கியதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள்.' என, டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தெரிவித்தார்.இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறில் கோடை சுற்றுலா சீசன் ஆண்டுதோறும் ஏப்ரல் 15க்கு மேல் துவங்கி விடும். அப்போது தமிழகம், கேரளா உள்பட தென் மாநிலங்களில் இருந்து பயணிகள் பெரும் அளவில் வந்து செல்வார்கள். இந்தாண்டு தென் மாநிலங்களில் லோக்சபா தேர்தல் என்பதால் ஏப்ரலில் பயணிகள் வருகை சற்று குறைந்தது. தற்போது கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்ததால் பயணிகள் வரத் துவங்கினர். அதனால் நேற்று நகர் உள்பட பல்வேறு சுற்றுலா பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மே இறுதிவரை பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.அதனை சமாளிக்கும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு வசதியாக மூணாறு நகர் உள்பட சுற்றுலா பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள் எனவும், வாகன நெரிசலை பொறுத்து நகரில் தபால் அலுவலகம் ஜங்ஷன் வழியாக கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலையில் ஒரு வழி பாதையாக போக்குவரத்து திருப்பி விடப்படும் எனவும் மூணாறு டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி தெரிவித்தார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago