உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரி ஓட்டிய டிரைவர் மாரடைப்பால் பலி

லாரி ஓட்டிய டிரைவர் மாரடைப்பால் பலி

மூணாறு: மூணாறில் நியூ காலனியைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் குமார் 50. இவர் நேற்று வழக்கம்போல் மரத்தடிகளை ஏற்ற லாரியை ஓட்டிச் சென்றபோது அருவிக்காடு எஸ்டேட் பகுதியில் வைத்து திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கினார். லாரி கட்டுப்பாட்டை இழந்தது. அருகில் இருந்தவர் தக்க சமயத்தில் லாரியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு குமார் இறந்ததாக தெரியவந்தது. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை