உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அதிகாலை விளம்பர போர்டை அகற்றிய பறக்கும் படை

அதிகாலை விளம்பர போர்டை அகற்றிய பறக்கும் படை

சின்னமனுார் : தேனி தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளை அதிகாரிகள் கடுமையாக பின்பற்றுகின்றனர்.நேற்று முன்தினம் அதிகாலை 12:30 மணியளவில் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்வர் ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் உள்ள கோழிக்கறிக் கடையில் ஸ்டாலின் தான் வர்றாறு ... விடியல் தரப் போறாறு ... என்ற வாசகங்களுடன் போர்டு கட்டப்பட்டுள்ளது.நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றார்.உடனடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து போடி தொகுதி பறக்கும் படைக்கு உத்தரவிடப்பட்டது. முந்தலில் முகாமிட்டிருந்த பறக்கும் படையினர் பல கி.மீ.,துாரம் பயணித்து ராசிங்கபுரம் சென்று, மெயின்ரோட்டில் கோழிக்கறி கடையில் இருந்த போர்டை அகற்றினார்கள்.அங்கு வந்த கடைக்காரர், சட்டசபை தேர்தலின் போது கட்டியது. சேதமடைந்துவிட்டது. இதை எப்படி கழற்றுவது என்று இருந்தேன். நல்ல வேளையாக பறக்கும் படை வந்து கழற்றி விட்டீர்கள். நன்றி ஐயா என்று கூறியதைகேட்டு பறக்கும் படை சிரித்து கொண்டு புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ