உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் வேகமாக வந்த இளைஞர்களை தட்டிக்கேட்டவர் மண்டை உடைப்பு

டூவீலரில் வேகமாக வந்த இளைஞர்களை தட்டிக்கேட்டவர் மண்டை உடைப்பு

சின்னமனூர் : போதையில் டூவீலரில் வேகமாக ஓட்டி மோத வந்தவர்களை தட்டிக்கேட்டவரை தாக்கி மண்டையை உடைத்தவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததால் போலீசில் ஒப்படைத்தனர்.சின்னமனூர் கருங்கட்டான் குளத்தில் ஒட்டல் நடத்தி வருபவர் செல்வம் 55, இவர் நேற்று பழைய பாளையம் ரோட்டில் தனது டூவீலரில் சென்ற போது, எதிரில் அதிவேகமாக டூவீலரில் வந்த இரண்டு இளைஞர்கள், செல்வம் வந்த டூ வீலர் மீது மோத வந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட செல்வத்தை இருவரும் கல்லால் அடித்து மண்டையை உடைத்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் இரண்டு இளைஞர்களையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.இருவரும் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த தவசி மகன் விக்னேஷ் 22 , இளையராஜா மகன் நவீன் 22 என்பதும் தெரிய வந்தது. இதில் விக்னேஷ் இடுப்பில் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இருவரையும் சின்னமனூர் போலீசில் ஒப்படைத்தனர். இருவருக்கும் பலத்த காயம் இருந்ததால் அவர்களை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எஸ்.ஐ. மூவேந்தன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்