உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உயிரிழந்த ஏட்டு குடும்பத்தினருக்கு போலீசார் ரூ.6.82 லட்சம் நிதியுதவி

உயிரிழந்த ஏட்டு குடும்பத்தினருக்கு போலீசார் ரூ.6.82 லட்சம் நிதியுதவி

தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்த போது உடல்நலம் பாதித்து இறந்த ஏட்டு காமராஜின் குடும்பத்தினருக்கு சக போலீசாரால் வழங்கப்பட்ட ரூ.6.82 லட்சத்தை எஸ்.பி., சிவபிரசாத் வழங்கினார்.பெரியகுளம் தாமரைக்குளம் அகிலன் தெரு காமராஜ் 53. இவர் போலீஸ் பணியில் 1993 ஜூன் 9ல் சேர்ந்தார். மணிமுத்தாறில் பயிற்சி முடிந்து, பல்வேறு இடங்களில் பணியாற்றிய நிலையில் தேனி எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணிபுரிந்தார். மார்ச் 19ல் பணியில் இருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார். இவருக்கு மனைவி கோமதி 41, மகள் ஈஸ்வரநர்மதை 22, மகன்கள் ஈஸ்வர தார்பயர் 17, ஈஸ்வர வேந்தர் 14 ஆகியோர் உள்ளனர். இவர்களின் குடும்ப வளர்ச்சி உதவிக்காக தமிழ்நாடு முழுவதும் 1993ல் பணியில் சேர்ந்த போலீசார் ஒன்றிணைந்து, உயிரிழந்த ஏட்டு காமராஜின் குடும்பத்தினருக்கு 6,82,600 சேகரித்தனர். அப்பணத்தை குடும்பத்தினரிடம் எஸ்.பி., சிவபிரசாத் வழங்கி ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை