உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எலுமிச்சை பழம் ரூ.15க்கு விற்பனை வரத்து குறைவால் விலை எகிறியது

எலுமிச்சை பழம் ரூ.15க்கு விற்பனை வரத்து குறைவால் விலை எகிறியது

ஆண்டிபட்டி:தேவை அதிகரிப்பு விளைச்சல் வரத்து குறைவால் ஆண்டிபட்டியில் ஒரு எலுமிச்சை பழம் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி பகுதியில் எலுமிச்சை விளைச்சல் அதிகம் உள்ளது. மொத்த மார்க்கெட் பெரியகுளத்தில் செயல்படுகிறது. சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களில் இப்பழங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் குளிர்பானத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விளைச்சல் குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆண்டிபட்டியில் சில மாதங்களுக்கு முன் ஒன்று, இரண்டு ரூபாய்க்கு கூட கிடைத்த எலுமிச்சை பழங்கள் விலை தற்போது ரூ.5 முதல் 15 விலையில் உள்ளது. வியாபாரிகள் கூறியதாவது: தற்போது எலுமிச்சை காய்ப்புக்கான சீசன். விளைச்சல் குறைந்ததால் தினமும் 10 டன் அளவில் இருக்க வேண்டிய வரத்து 4 டன் ஆக குறைந்துள்ளது. மேலும் கிராமங்களிலும் பங்குனி பொங்கல் விழா தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த கிராமங்கள் என மே மாதம் வரை இவ்விழா நடைபெறும். இதனால் இரு மாதங்களுக்கு எலுமிச்சை பழங்கள் தேவை அதிகம் இருக்கும். தற்போது கிலோ ரூ.200 வரை உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை