உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் விளக்குகள் எரியாததால் இருளில் முழ்கும் தெருக்கள்

மின் விளக்குகள் எரியாததால் இருளில் முழ்கும் தெருக்கள்

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சில இடங்களில் மின்விளக்குகள் பராமரிப்பில்லாததால் இருளில் முழ்குகின்றன.தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இதில் 22 வது வார்டில் ஜவஹர் மெயின்ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டில் காமராஜர் பூங்கா உள்ளது. மேலும் இந்த ரோட்டின் வழியே பெரும்பாலானவர்கள் புது பஸ் ஸ்டாண்டிற்கு செல்கின்றனர். சில நாட்களாக இந்த ரோட்டில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இந்த வழியாக நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகுகின்றனர். இந் ரோட்டில் சில இடங்களில் வேகத்தடைகளும் உள்ளன. போதிய வெளிச்சம் இல்லாததால் வேகத்தடைகளில் சிலர் தடுமாறி விழுவதும் தொடர்கிறது. நகராட்சி அதிகாரிகள் இரவில் மின் விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை