உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

தேனி, : கம்பம் சின்னஓவுலாபுரம் தெற்குத்தெரு விவசாயக் கூலி குமரேசன் 40. இவருக்கு லோகவியாகா, காவ்யாஸ்ரீ என்ற மகன், மகள் உள்ளனர். இவர்கள் வசித்த வீட்டின் புகைக்கூண்டு சுவர் மழை காரணமாக சேதமடைந்து இருந்தது. ஆக., 13ல் காலையில் குமரேசன் சேதமடைந்த புகைக்கூண்டை சீரமைக்க, சமையலறையில் நின்று சீரமைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தேசமடைந்த மதில்சுவர் குமரேசன் மீது விழுந்தது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.பாதிக்கப்பட்ட குமரேசனை மனைவி அருகில் இருந்தவர்கள் உதவியுடன், கணவரை சின்னமனுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி ராகப்பிரியா புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கினறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை