உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழக வாட்டர் போலோ அணிக்கு தேனி பள்ளி மாணவி தேர்வு

தமிழக வாட்டர் போலோ அணிக்கு தேனி பள்ளி மாணவி தேர்வு

தேனி : தமிழக வாட்டர் போலோ அணிக்கு தேனியை சேர்ந்த பள்ளி மாணவி ஜெமிமா கோல் கீப்பராக தேர்வாகி உள்ளார்.மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக அணிக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெமிமா கோல் கீப்பராக தேர்வாகி உள்ளார். இவர் வேலம்மாள் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். மத்தியபிரதேசம் இந்துாரில் ஜூலை 7 முதல் 11 வரை நடக்க உள்ள தேசிய வாட்டர் போலா விளையாட்டில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர்வான மாணவியைநீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், மாணவியின் பெற்றோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ