உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மிரட்டி பணம் கேட்ட மூவர் கைது

மிரட்டி பணம் கேட்ட மூவர் கைது

தேனி,: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ரோட்டின் இருபுறங்களிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் போடேந்திரபுரம் இளங்கேஸ்வரன் 50, வாழையாத்துப்பட்டி விஜய் 25, பூதிப்புரம் சதீஸ்குமார் 24 ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்தனர். கடை உரிமையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சண்முகம் புகாரில் வீரபாண்டி போலீசார் மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ