| ADDED : ஆக 04, 2024 06:15 AM
மூணாறு : வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் மூணாறைச் சேர்ந்த மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர்.கேரளா, வயநாட்டில் ஜூலை 30ல் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் முண்டக்கை, சூரல்மலை, பூஞ்சிரிவட்டம், அட்டமலை ஆகிய கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ராணுவம் மற்றும் அரசு துறைகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மூணாறு தீயணைப்பு நிலையத்தில் உதவி அதிகாரியாக பணியாற்றி கடந்த மே 31ல் பணி ஓய்வு பெற்ற பிரதீப், அட்வஞ்சர் அகாடமி பயிற்சியாளர் மோகன், மலையேற்ற பயிற்சியாளர் ஆசிஷ்வர்க்கீஸ் ஆகிய மூணாறைச் சேர்ந்த மூவரும், வயநாடு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூணாறு அருகே பெட்டிமுடியில் 2020 ஆக.6ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை மீட்க பெரும் உறுதுணையாக இருந்தனர். இது தவிர பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளில் பங்கேற்று அனுபவம் மிக்கவர்கள் என்பது குறிப்பிடதக்கது.