உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு அவசியம்

ஆண்டிபட்டியில் லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு அவசியம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் பொருட்கள் ஏற்றி இறக்க வந்து செல்லும் சரக்கு லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதி ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் வரை உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நகர்பகுதி பல மடங்கு விரிவடைந்துள்ளது. சமீபத்தில் ரோடு விரிவாக்கத்திற்காக சில இடங்களில் ரோட்டின் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. விரிவாக்கம் செய்தும் நகர் பகுதியில் நெருக்கடி தீர்ந்தபாடில்லை. ஆண்டிபட்டி செட்டியார் பேட்டை, கடைவீதி, நாடார் தெரு உட்பட ஸ்டாண்ட் முதல் ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு வரை நெருக்கடியான இடங்களில் சரக்கு லாரிகளை நிறுத்தி எந்நேரமும் பொருட்களை ஏற்றி இறக்கி செல்கின்றனர். சரக்கு லாரிகளால் ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைகிறது. பொருட்களை ஏற்றி இறக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் சரக்கு லாரிகள் மீது அபராதம் விதிக்க போலீசார் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ