உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருப்பதி தேவஸ்தானம் போர்டு 60 ஆயிரம் கிலோ ஏலக்காய் கொள்முதலுக்கு டெண்டர்

திருப்பதி தேவஸ்தானம் போர்டு 60 ஆயிரம் கிலோ ஏலக்காய் கொள்முதலுக்கு டெண்டர்

கம்பம்: திருப்பதி தேவஸ்தானம் போர்டு லட்டு பிரசாதம் தயாரிக்க 60 ஆயிரம் கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது.தென் மாநிலங்களில் உள்ள கோயில்களில் முதன்மையானது திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு லட்டு பிரசாதங்களில் பயன்படுத்த 60 ஆயிரம் கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய அறிவிப்பு தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. வரும் 4 மாதங்களுக்கு 60 ஆயிரம் கிலோ 8 எம்.எம்., ஏற்றுமதி ரக ஏலகாய்களாக இருக்க வேண்டும். இதனை இடுக்கி மாவட்டத்தில் உள்ள இ ஆக்சன் சென்டர், போடியில்உள்ள ஆக்சன் சென்டர் மற்றும் பெரிய ஏலக்காய் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏலக்காய் சப்ளை செய்ய விரும்பும் நிறுவனங்கள் இ டெண்டரில் விண்ணப்பிக்கலாம். டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ஆண்டிற்கு ரூ.4.7கோடிக்கு மேல் வர்த்தகம் செய்திருக்க வேண்டும், அதற்குரிய சான்றிதழ்களை இணைக்க வேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு 32,400 கிலோ விற்பனை செய்ததற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும். சப்ளை செய்யும் ஏலக்காய் தேசிய தரச்சான்று பெற்ற ஆய்வகம் வழங்கும் சான்றிதழ் இணைக்க வேண்டும். டெண்டரில் பங்கேற்க பொறுப்பு தொகை (EMD) ரூ.33 லட்சத்திற்கு வங்கி வரைவோலை சமர்ப்பிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆர்டரை பெறுவதற்கு இடுக்கி மாவட்டத்தில் உள்ள முன்னணி ஏலக்காய் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் களம் இறங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை