உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டும் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டும் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

மூணாறு: மூணாறைச் சுற்றியுள்ள நீர் வீழ்ச்சிகளில் ரம்மியமாக தண்ணீர் கொட்டும் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.மூணாறு அருகே ஆற்றுக்காடு, லக்கம், பெரியகானல், அடிமாலி அருகே வாளரா, சீயப்பாறை ஆகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவற்றில் லக்கம், ஆற்றுக்காடு, வாளரா ஆகிய நீர் வீழ்ச்சிகளில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து காணப்படும். வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியில் மட்டும் குளிப்பதற்கு அனுமதியுண்டு. மீதமுள்ள நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.பெரியகானல், வாளரா , சீயப்பாறை ஆகிய நீர்வீழ்ச்சிகள் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன.தற்போது தென்மேற்கு பருவ மழை என்பதால் அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நீர்வீழ்ச்சிகளில் ஆர்பரித்து தண்ணீர் கொட்ட வேண்டிய நேரம் என்றபோதும் மழை குறைவு என்பதால் தண்ணீர் பால் போன்று கொட்டுகிறது. அதுவும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து தேனி செல்லும் வழியில் உள்ள பெரிய கானல் நீர்வீழ்ச்சியை அவ்வப்போது மேகங்கள் சூழ்ந்து கொள்கின்றன. அந்த ரம்மியமான அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ