உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கடமலைக்குண்டு : தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கடமலைக்குண்டில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். கடமலைக்குண்டு வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம், நிர்வாகி சூரியநாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உட்பட நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை