உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சூரியநல்லியில் போக்குவரத்து நெரிசல்: பொது மக்கள் பாதிப்பு

சூரியநல்லியில் போக்குவரத்து நெரிசல்: பொது மக்கள் பாதிப்பு

மூணாறு : சூரியநல்லியில் நேற்று காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.மூணாறு அருகே சூரியநல்லியில் இருந்து கொழுக்கு மலைக்கு சாகச பயணமாக சுற்றுலாப் பயணிகள் ஜீப்புகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். தினமும் நூற்றுக் கணக்கில் ஜீப்புகள் சென்று வருகின்றன. அதற்கு சூரியநல்லியில் கொழுக்குமலை செல்லும் ரோட்டின் நுழைவு பகுதியில் மாவட்டச் சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கு நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவு சீட்டு பெற ஜீப்புகள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுதான் காரணம் என தெரியவந்தது. அதில் சிக்கி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுலா சீசன், பண்டிகை, வார விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் போது பயணிகள் வருகை அதிகரிக்கும். அதனால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும். அதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வசதியாக போலீசாரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்