உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் போக்குவரத்து நெருக்கடி

கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் போக்குவரத்து நெருக்கடி

தேனி : தேனி கலெக்டர் ஆபீஸ் வழியாக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் மனுக்கள் வழங்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகின்றனர். மனு அளிக்க வரும் பலர் வாகனங்களை அதற்கான பகுதிகளில் நிறுவத்துவதில்லை. மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, டூவீலர்கள் நிறுத்தும் இடத்தின் ரோட்டோரம் என வாகனங்களை நிறுத்துகின்றனர். இது தவிர மேம்பால பணிக்காக வாகனங்கள் அரசு ஐ.டி.ஐ., வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத சிலர் கலெக்டர் அலுவலகம் வழியாக மதுரை ரோடு செல்கின்றனர்.சில வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகினறன. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் போல் ஏற்படுகிறது. அலுவலக வளாத்தில் தேவையின்றி, வாகனங்கள் வந்து செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை