உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் எச்சரிக்கை கருவி குறித்த பயிற்சி முகாம்

மின் எச்சரிக்கை கருவி குறித்த பயிற்சி முகாம்

ஆண்டிபட்டி : மின்துறை களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மின்சார எச்சரிக்கை கருவி பயன்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நடந்தது. பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தலைமை வகித்தார்.மின்வாரிய களப்பணியாளர்கள் பணியின் போது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக மின்சார எச்சரிக்கை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை கருவியை எந்தெந்த இடங்களில் எவ்வாறு பயன்படுத்துவது அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து விளக்கப்பட்டது. மின் களப்பணியாளர்களின் சந்தேகங்களுக்கு உதவி செயற்பொறியாளர்கள் பார்த்தசாரதி, சுப்பையன், உதவிப் பொறியாளர்கள் தீபா, நவீன்சுந்தர், ரமேஷ், மகேஷ், சக்தி பிரகாஷ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு உபகோட்டங்களைச் சேர்ந்த களப்பணியாளர்கள், மின் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ