உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விவசாயிகளுக்கு பயிற்சி

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விவசாயிகளுக்கு பயிற்சி

தேனி : மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 40 விவசாயிகளை தேர்வு செய்து ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைப்பது பற்றி பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.வேளாண்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களில் நெல், பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு, வாழை, மக்காச்சோளம் அதிகம் சாகுபடி செய்யும் கிராமங்களில் இருந்து 40 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மண்வள அட்டை அடிப்படையில் சமச்சீர் உரம் இடுதல், பசுந்தாள், உயிர், அங்கக உரம் பயன்படுத்துதல், ரசாயன உரப்பயன்பாட்டை குறைத்தல் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.பயிற்சியினை உழவர் பயிற்சி மையம், உர பரிசோதனை நிலைய, மண் பரிசோதனை அலுவலர்கள் வழங்குவர். வட்டார அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டதும் வட்டாரம் வாரியாக பயிற்சி வழங்க உள்ளோம். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை