மேலும் செய்திகள்
ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்
06-Feb-2025
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே அனுமதியின்றி கல்குவாரி நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய பாலு, கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.தேவதானப்பட்டி அருகே அ.வாடிப்பட்டியிலிருந்து விராலிபட்டி செல்லும் ரோட்டில் அ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தொப்பையன் மனைவி லதா 45. பட்டா நிலத்தில் அரசு அனுமதியில்லாமல் கற்களை வெடிவைத்து உடைத்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் ரஜத்பீடன், தாசில்தார் மருதுபாண்டி, வி.ஏ.ஓ., ராஜ்குமார் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், டெட்டனேட்டர்,வெடிமருந்து குச்சிகள், 20 கிலோ வெடிமருந்து, பதிவெண் இல்லாத மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வாழவந்தான், வைகுண்டவிஜயன், குமார், லதா, சேகர், கூடலிங்கம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட தப்பி ஓடிய பாலு 55. கோபாலகிருஷ்ணனை 62. ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர்.-
06-Feb-2025