உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை நாளை திறப்பு

வைகை அணை நாளை திறப்பு

சென்னை:வைகை அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பான 85,563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாய் கீழ் உள்ள ஒரு போக பாசன பரப்பான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும், வைகை அணையில் இருந்து 45 நாட்கள் முழுமையாக 75 நாட்களுக்கு முறை வைத்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை