உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் கட்டுப்பாடுகள் வாபஸ்

இடுக்கியில் கட்டுப்பாடுகள் வாபஸ்

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டன.இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 18 முதல் வலுவடைந்து பலத்த மழை பெய்தது. ஜூன் 25ல் பலத்த காற்றுடன் கன மழையாக மாறியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதனிடையே வானிலை ஆய்வு மையம் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை விடுத்ததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலன் கருதி படகு சவாரி உள்பட நீர்நிலைகளில் பொழுது போக்கு அம்சங்களுக்கும், டிரக்கிங் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.மாவட்டத்தில் மழை குறைந்ததுடன் முன்னெச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படாததால் சுற்றுலா பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ் பெறபட்டதாக மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை அறிவித்தது. சம்பந்தப்பட்ட துறையினர் முன்னெச்சரிக்கையுடன் சுற்றுலாவை செயல்படுத்தலாம் என கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை