உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலத்தில் கார் மோதி பெண் பலி

பாலத்தில் கார் மோதி பெண் பலி

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே கட்டுப்பாடு இழந்த கார் ரோட்டோர சிறு பாலத்தில் மோதியதில் காரில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.மதுரை மேலூர் தாலுகா திருவாதரூரை சேர்ந்தவர் செந்தில் 42, மூணாறுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இவர் நேற்று முன்தினம் காரில் இரவில் திரும்பி உள்ளார்.அதிகாலை 2:00 மணிக்கு ஆண்டிபட்டி பொம்மிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாடு இழந்த கார் ரோட்டின் ஓரத்தில் இருந்த சிறு பாலத்தில் மோதியது. விபத்தில் செந்தில் மனைவி கலைவாணி 40, சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஒட்டிய செந்தில் ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.காரில் இருந்த அவரது உறவினர்கள் ஹர்ஷினி 13, பிரியங்கா 15, பிரண்யா 15, சுஜன் 17, கௌசிங் 21 ஆகியோர் காயமடைந்தனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ