உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வளர்ப்பு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி பெண் பலி

வளர்ப்பு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி பெண் பலி

மூணாறு : மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் நகரில் ரேபிஸ் நோய் பாதிப்பால் பெண் பலியானார்.சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் நகரைச் சேர்ந்தவர் மாலாமணி 51. இவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய் கடித்தது. அதனை பெரிது படுத்தாமல் சிகிச்சை பெறவில்லை.அதன்பிறகு அந்த நாய் இருவரை கடித்தது. அந்த நாயும், வேறு சில நாய்களும் கடந்த வாரம் இறந்தன. அதனையடுத்து மாலாமணிக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு அறிகுறி தென்பட்டது. அவரை மூணாறில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்கு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாலாமணி இறந்தார். அதனால் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ