உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்பாட்டிற்கு வருமா மகளிர் சுகாதார வளாகம்

பயன்பாட்டிற்கு வருமா மகளிர் சுகாதார வளாகம்

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர்நரசிங்கபுரத்தில் மூடியுள்ள மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.வண்டியூர் ரோடு சந்திப்பில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் சமீபத்தில் ரூ.1.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்திற்கான போர்வெல் பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்யாமல் சுகாதார வளாகத்தை பூட்டி விட்டனர். மகளிர் சுகாதார வளாகம் பூட்டப்பட்டதால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மூடப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை