| ADDED : ஜன 30, 2024 06:58 AM
தேனி : தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் போடியில் நடந்த இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாமில் 115 தம்பதிகள் பங்கேற்றனர்.இம்மருத்துவமனை சார்பில் குழந்தையில்லாத தம்பதிகளுக்கான சிறப்பு இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் போடி பஸ் ஸ்டாண்டு பின்புறம் உள்ள ஓட்டல் அரங்கில் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடந்தது. முகாமில் தொடர் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணமாகி ஓராண்டிற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளவர்கள், முன்னரே செயற்கை கருத்தரித்தல் பரிசோதனையில் வெற்றி பெறாதவர்கள் பங்கேற்றனர். போடி நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, போடி டி.எஸ்.பி, பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை சிறப்பு டாக்டர் காதர்சா, டாக்டர்கள் பிர்தெளஸ் பாத்திமா, கிறிஸ்டி ஆகியோர் தம்பதிகளை பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர். அனைத்து தம்பதியினருக்கும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை, ஆண் இனவிருத்தி அணு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் 115 தம்பதிகள் பங்கேற்று பயனடைந்தனர். துவக்க விழாவில் நகராட்சி 29வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சங்கர், அமெரிக்கன் ஆப்டிகல்ஸ் உரிமையாளர் ரசூல், வியாபார பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைப் பிரிவு மேலாளர் எபிஜேம்ஸ், பி.ஆர்.ஓ., சலீம், அலுவலர்கள் ஷேக்பரீத், தீபன் ஆகியோர் செய்திருந்தனர்.