வரைவு வாக்காளர் பட்டியலில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : மாவட்டத்தில் மொத்த 10,04,564 வாக்காளர்கள் எண்ணிக்கை
தேனி:தேனி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 4 தொகுதிகளிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 10,04,564 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2025 ஜன.6ல் வெளியிடப்பட்டது. அதன்பின் 2025 அக்.27 வரை பொது மக்களிடம் இருந்து சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்,தொகுதி மாற்றம் ஆகியவற்றிற்காக பெறப்பட்ட மனுக்கள் விசாரணை செய்து வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டது. அதன்படி ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்கள் 1,36,869 , பெண்கள் 1,42,280, இதரர் 34 இதரர் என மொத்தம் 2,79,183 வாக்காளர்கள் இருந்தனர். பெரியகுளம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,41,477, பெண்கள் 1,48,373, இதரர் 120 இதரர் என மொத்தம் 2,89,970 வாக்காளர்கள். போடி தொகுதியில் ஆண்கள் 1,34,548, பெண்கள் 1,42,784 , இதரர் 18 என மொத்தம் 2,77,350 வாக்காளர்கள். கம்பம் தொகுதியில் ஆண்கள் 1,37,473, பெண்கள் 1,46,300 . இதரர் 27 என மொத்தம் 2,83,800 வாக்காளர்கள் இருந்தனர். 4தொகுதிகளிலும் 5,50, 367 ஆண்கள், பெண்கள் 5,79,737, இதரர் 199 பேர் என மொத்தம் 11, 30,303 வாக்காளர்கள் இருந்தனர்.